கேரிகேச்சர்லைவ்ஸ்

Caricature for any Moment

வரையறைகள்

உங்களோடு இணைந்து பணியாற்றுவதில் மகிழ்கிறோம்!

இந்த வரையறை சட்டங்கள் பரிசு ஓவியங்களுக்கும், நேரடி ஓவியங்களுக்கும் பொருந்தும்... கவனமாக படிக்கவும்

1) கேரிகேச்சர் நீங்கள் தரும் ஒளிப்படங்களின் அடிப்படையில் வரையப்படுகிறது... தெளிவில்லாத ஒளிப்படம் தெளிவில்லாத ஓவியத்தையே தரும் என்பதை கவனத்தில் கொள்க.
2) முகத்தை அப்படியே தருவதாக ஒன்றும், முகத்திலுள்ள அடையாளங்களை மிகைப்படுத்தி, நகைச்சுவையாக தருவதாக ஒன்றுமான ஓவியங்களில் எது உங்கள் தேர்வு எது என்பதை கூறவும்.
3) தெளிவான ஒளிப்படம் கட்டாயமாக்கப்படுகிறது
4) கையால் வரையப்பட்டு, கணிணி துணையோடு வண்ணம் செய்யப்படுகிறது
5) ஒரு நபருக்கு இரண்டு ஒளிப்படம் நல்லது
6) தெளிவான மாதிரி ஓவியம் (முகம் மட்டும்) பெற பணம் வங்கி கணக்குக்கு அனுப்பிவைக்கவேண்டும்
7) மாதிரி மற்றும் வண்ண ஓவியம் பல திருத்தங்கள் பெறப்படும்
8) முழுத்தொகை செலுத்தியவர்களின் வேலைகள் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்லும்
9) பணம் திரும்ப பெற வழி உண்டா? உண்டு இங்கே அழுத்தவும்
10) மாதிரி ஓவியம், உங்கள் சம்மதத்திற்கு பிறகே அடுத்த நிலைக்கு செல்லும்
11) பொதுவான பின்னணி வண்ணம் ( பூங்கா, சமவெளி, மலைப்பகுதி)
12) நீங்கள் தேர்வு செய்யும் ஆடை அலங்காரங்கள் கிடைக்கும்
13) நீங்கள் தேர்வு செய்யும் இடங்கள் வரையலாம்
14) நீங்கள் தேர்வு செய்யும் கதை, யோசனை இவற்றைக்கொண்டும் வரையலாம்
15) வழக்கமான அச்சு, தனித்தபாலில் உங்கள் இல்லத்திற்கு வந்து சேரும் வகையில் உள்ள அளவு 10க்கு 8 அங்குலம், கணிணி கோப்பு அதிகபட்ச அளவு 4 அடி.
16) இணைய வங்கி சேவை ஏற்றுக்கொள்ளப்படும், பேபல் வங்கி மூலமும் செலுத்தலாம்
17) தொகை செலுத்திய விபரத்தை தெரியப்படுத்த வேண்டுகிறோம்
18) ஓவியம் முடித்த பிறகு அதற்கான தொகை என்ற வசதி எங்களிடம் இல்லை
19) மாதிரி ஓவியம் ஒப்புக்கொண்ட அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிந்துவிடும்.
20) தபாலில் வருவதென்றால் கூடுதலாக ஒரு நாள் ஆகலாம்.
21) தமிழ்நாட்டுக்குள் இலவச தபால் சேவையும், மற்ற மாநிலங்களுக்கு ரூ. 99/- ம் உடனடியா வேண்டும் என்றால் ரூ. 499/- நீங்கள் கூடுதலாக செலுத்தவேண்டும். இந்த சேவை வெளிநாடுகளுக்கு அளிப்பதில்லை
22) உங்கள் ஓவியத்தின் மூலம், எப்போது இருக்கும். எப்போது வேண்டுமானாலும் அதை ஒரு சிறு தொகை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்
23) உங்களுக்கான ஓவியம் உங்களுடையதே... அதன் ஆக்கம், அதன் வடிவம் முதலாவை எங்கள் ஓவியர்களுக்கானது.
24) எங்கள் ஓவியர்களை, நேரடி ஓவிய அமர்வுக்காக அழைக்கலாம். இடம், நேரம், உங்கள் பெயர் மின்னஞ்சல் மூலமாக தந்து, வங்கிக்கு ரூ 1000/- செலுத்தி பதிந்து கொள்ளலாம்.
25) முழுப்பணமும் செலுத்தி, நிகழ் நாளுக்கு முன்பான நிலையில் ரத்து செய்தால் 70% பணம் திரும்ப பெற வாய்ப்புண்டு.
26) நேரடி ஓவிய அமர்வு முடிந்த அதே நேரத்தில் அதற்கான முழு தொகையும் செலுத்தவேண்டும்
27) நிறுவனம் தொடர்பான எல்லா ஓவியங்களுக்கும் முழு முன் தொகை செலுத்தப்பட வேண்டும். நேரடி ஓவிய அமர்வு என்றால் ரூ. 10000/- மூன்று மணி நேர நிகழ்வுக்கு செலுத்தவேண்டும்...
28) இந்த ஓவியங்களிம் மூலம் எங்களிடமே இருக்கும், மிக பத்திரமாக...
29) எங்களை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்
30) எங்கள் ஓவியருடன் எப்பொழுதும் நீங்கள் தொடர்புகொள்ளலாம்
31) கேரிகேச்சர்லைவ்ஸ், நீங்கள், ஓவியம்... இது தொடர்பான எல்லா விசாரணைகளும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதி விசாரணைக்குட்பட்டது.

பணம் திரும்பப்பெறுவதற்கான விதிகள்

a) நீங்கள் முழு பணமும் செலுத்திவிட்டீர்கள், ஆனால் ஓவியம் செய்ய உங்களுக்கு விருப்பமில்லை, நல்லது உங்கள் பணத்தில் 80% திரும்பப்பெற 7 நாட்களுக்குள் ஆவண செய்யப்படும்.
b) நீங்கள் கோட்டு மாதிரி ஓவியம் மட்டுமே பெற முன்பணமாக ரூ. 1000 செலுத்தியுள்ளீர்கள். மாதிரி ஓவியம் தங்களுக்கு கிடைத்தபிறகு பணம் திரும்பப்பெற வழியில்லாததற்கு வருந்துகிறோம்.
c) நீங்கள் முழு பணமும் செலுத்திவிட்டீர்கள், ஆனால் ஓவியம், எல்லா நிலைகளிலும் முடித்தாகிவிட்டது, ஆனாலும் ஓவியம் உங்களை திருப்திபடுத்தவில்லை. இந்தநிலையில் பணம் திரும்பப்பெற வழியில்லாததற்கு வருந்துகிறோம்.
d) இந்த வகைகளில் பணத்தை திரும்பப்பெறுவதன் மூலமாக. உங்களுக்கும். ஓவியத்திற்குமான உரிமையை நீங்கள் இழக்கிறீர்கள். முழு ஓவிய உரிமை எங்கள் நிறுவனத்திற்கே சாரும்.

by கேரிகேச்சரிஸ்ட் சுகுமார்ஜி

தலைவர், இயக்குனர் கேரிகேச்சர்லைவ்ஸ்

இந்த வரையறைகள் முன்னறிவிப்பின்றி சில நேரம் மாறுதலுக்கு உட்பட்டதாகும்